உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பக்தரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்

பக்தரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் தெப்பத் திருவிழாவின் போது பக்தரிடமிருந்து, 40 ஆயிரம் ரூபாய், திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பள்ளிப்பட்டு அடுத்த, புண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் புரு÷ஷாத்தமன். இவர் தனது மகள் சரண்யாவை பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்காக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது, 50 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றார். அங்கு நடந்த கவுன்சிலிங்கில், 5,000 ரூபாய் நுழைவு கட்டணத்தை கட்டினார். மீதி பணத்தில், 5,000 ரூபாயை சட்டை மேல் பாக்கெட்டிலும், 40 ஆயிரம் ரூபாயை டிரவுசர் பாக்கெட்டிலும் வைத்து கொண்டார்.தனது மகள் சரண்யாவுடன் ஊருக்கு திரும்ப திருத்தணி வந்தார். திருத்தணி முதல் நாள் தெப்பத் திருவிழாவை காணச் சென்றார். சுவாமி கும்பிட்டு விட்டு பஸ் நிலையம் திரும்பும் போது, யாரோ மர்ம நபர்கள், புரு÷ஷாத்தமனின் டிரவுசர் பாக்கெட்டை 'கட்' செய்து, 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது. புரு÷ஷாத்தமன் திருத்தணி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ