மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
7 hour(s) ago
சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன.மூன்றாவது டிவிஷன் 'ஏ' பிரிவில், நுங்கம்பாக்கம் சி.சி., மற்றும் அருணா அணிகள் மோதின. முதலில் விளையாடிய நுங்கம்பாக்கம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழந்து, 306 ரன்களை எடுத்தது. அணியின் வீரர் சீனிவாசன், 106 பந்துகளில் 1 சிக்சர், 10 பவுண்டரி என, மொத்தம் 100 ரன்களை எடுத்தார்.கடினமாக இலக்குடன் அடுத்து களமிறங்கிய அருணா சி.சி., அணி, 43.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 182 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 124 ரன்கள் வித்தியாசத்தில் நுங்கம்பாக்கம் சி.சி., அணி வெற்றி பெற்றது.இரண்டாவது டிவிஷன் பிரிவு போட்டியில், முதலில் களமிறங்கிய ஐ.டி., சைக்கிள்ஸ் அணி, 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழந்து, 296 ரன்கள் எடுத்தது. அணியின் வீரர் சச்சின் கட்டாரியா, 121 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி என, 143 ரன்களை அடித்து தெறிக்கவிட்டார். அடுத்து, அதிரடியாக ஆட்டத்தை துவங்கிய, ஆர்.கே.எஸ்., - சி.சி., அணி துவக்கத்தில் இருந்தே ரன்களை குவித்தது.முடிவில், எட்டு விக்கெட் இழந்து, 50வது ஓவரில், 301 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அணியின் வீரர் சந்தோஷ், 135 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரி என, 142 ரன்களை அடித்து வெற்றிக்கு உதவினார்.
7 hour(s) ago