உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போக்குவரத்து விதிமீறல்: இருசக்கர வாகனத்தில் இஷ்டம் போல் பயணம்

போக்குவரத்து விதிமீறல்: இருசக்கர வாகனத்தில் இஷ்டம் போல் பயணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற சாலை விதியை மீறி மூவர், நால்வர், ஐவர் என இஷ்டம் போல் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.குறிப்பாக இப்பகுதியில் உள்ள சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம் உள்ள பகுதியில் இரு சக்கர வாகனங்களில் போக்குவரத்து விதியை மீறி அபாய நிலையில் செல்கின்றனர்.இவ்வாறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்து வருவதை காவல் துறையினர் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரு சக்கர வாகனம் குறித்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ