உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பராமரிப்பு இல்லாத வெள்ளாத்துார் ஏரி

 பராமரிப்பு இல்லாத வெள்ளாத்துார் ஏரி

ஆர்.கே.பேட்டை: நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியின் வரத்து மற்றும் உபரிநீர் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி சீரழிந்துள்ளன. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வெள்ளாத்துாரில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு விளக்கணாம்பூடி ஏரியில் இருந்து நீர்வரத்து உள்ளது. இந்த வரத்து கால்வாய் கடந்த ஆறு ஆண்டுகளாக துார் வாரப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து சீரழிந்துள்ளது. அதே போல், ஏரியின் கலங்கல் பகுதியும் உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. கலங்கல் பகுதி வரை தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. கலங்கல் பகுதியும், கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும் கால்வாயும் இருக்கும் இடமே தெரியாத நிலையில் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள், ஏரியின் வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை