உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வீரராகவ சுவாமிக்கு தங்க கவசம் அணிவிப்பு

 வீரராகவ சுவாமிக்கு தங்க கவசம் அணிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை நேற்று துவங்கியது. தொடர்ந்து தங்க கவச சேவை வரும் 5ம்தேதி வரை நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். நேற்று காலை மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 5ம்தேதி இரவு வரை, தங்க கவச சேவை நடைபெறும். மறுநாள், 6ம் தேதி முதல் வரும் 29ம்தேதி வரை, மூலவருக்கு தைலக்காப்பு நடைபெறும். தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும். திருமுகம் மற்றும் பாதத்தை, பக்தர்கள் தரிசித்துச் செல்லலாம். வரும் 30ம்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று, திரை விலக்கப்பட்டு, மூலவர் தரிசனம் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை