மேலும் செய்திகள்
நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்
5 minutes ago
இன்றைய மின் தடை:திருவள்ளூர்
7 minutes ago
விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
10 minutes ago
ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடுவது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் ஆரணி ஆற்றின் நடுவே, பிச்சாட்டூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இதன் மொத்த கொ ள்ளளவு, 1.81 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. வடகிழக்குப் பருவ மழையால் ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டு முழு கொள்ளளவை அடையும் நிலை ஏற்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. மழைநின்றதால் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இரு தினங்களுக்கு முன் பிச்சாட்டூர் மற்றும் சுற்றியுள்ள பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் கடந்த, 18ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 800 கன அடி வீதம் அங்குள்ள இரண்டு மதகுகள் வழியே திறக்கப்பட்டது. நேற்று மழை நின்றதால், ஏரிக்கு நீர்வரத்து, 100 கன அடி மட்டுமே வந்தது. இதனால் நேற்று மாலை , 6:00 மணிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.
5 minutes ago
7 minutes ago
10 minutes ago