உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  டிராக்டரில் தவறி விழுந்த பெண் பலி

 டிராக்டரில் தவறி விழுந்த பெண் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதிய விபத்தில், டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். கவரைப்பேட்டை அருகே பரணம்பேடு கிராமத்தில் வசித்தவர் சாவித்திரி, 40. நேற்று மதியம் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர் மோகன் என்பவர் ஓட்டிச் சென்ற டிராக்டரில் முன்னால் அமர்ந்து பயணித்தார். கவரைப்பேட்டை அருகே கீழ்முதலம்பேடு கிராம சாலையில் டிராக்டர் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று டிராக்டர் மீது மோதியது. அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த சாவித்திரி சுயநினைவை இழந்தார். ஆபத்தான நிலையில் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி