உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

திருவாரூர்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஞானபுரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, திருவோணமங்கலத்தில் ஞானபுரீ சித்ரகூடத்தில் 33 அடி உயர சங்கடஹர மங்கல மாருதி கோவில் அமைந்துஉள்ளது. இக்கோவிலில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை காலை 7:00 மணிக்கு சீதா, லட்சுமணர், ஹனுமன் சமேத கோதண்டராம ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.தொடர்ந்து, அகண்ட நாம பஜனை மற்றும் கூட்டு வழிபாடு நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெறுமாறு, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின்ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரர் ஆகியோர் செய்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி