| ADDED : ஜூலை 12, 2011 12:24 AM
புதூர் : புதூர் அருகே உள்ள நாகலாபுரத்தில் பாலீத்தின் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி எஸ்.ஏ.என். மேல்நிலைப்பள்ளி என்.எஸ். எஸ்., என்.சி.சி., பசுமைப்படை இயக்கம் சார்பில் நடந்தது.பேரணி எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக தலைமையாசிரியர் முருகாண்டிசாமி தலைமை வகித்து பாலீத்தின் ஒழிப்பு விழிப்புணர்வு கல்வி அவசியம் பற்றி கூறி, பின்னர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். என்.எஸ். எஸ்.திட்ட அலுவலர் ஆறுமுகச்சாமி வரவேற்றார். என்.சி. சி.திட்ட அலுவலர் ஜான்ஸ்டானி, பசுமைப்படை இயக்க பொறுப்பாசிரியர் சுப்புலட்சுமி,முன்னாள்என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி., பசுமைப்படை மாணவ, மாணவியர்கள் ஏராளமாக கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்திய படியும், கோஷங்கள் எழுப்பிய படியும் சென்றனர். பேரணி ரெட்டியபட்டி சாலை, விளாத்திகுளம் சாலை, மெயின் பஜார், நாடார்தெரு, சந்தைப்பேட்டை சாலை, அருப்புக்கோட்டை சாலை உட்பட பல்வேறு தெருக்களின் வழியாக சென்று பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது. உடன் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.