உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடியில் 2 பேர் கொலை

துாத்துக்குடியில் 2 பேர் கொலை

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து 45. பழையகாயலில் மனைவி, மகன்கள், மகளுடன் வசித்தார். கடந்த ஆறு மாதங்களாக ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்.நேற்று முன்தினம் இரவில் வெள்ளூர் ரோட்டில் வாழைத்தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொருவர் கொலை

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் 60. வக்கீல் குமாஸ்தா. சமீப காலமாக நில புரோக்கராகவும் தொழில் செய்தார். தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு பழைய தொழிற்பேட்டையில் நேற்று முன்தினம் இரவில் இவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் கந்தசுப்பிரமணியன் மற்றும் மதுரை ஜெயராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்துள்ளது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை