மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். அவர்கள் கடலில் உற்சாகமாக குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், திருச்செந்துார் கோவில் கடல் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 100 அடி துாரம் திடீரென கடல் உள் வாங்கி காணப்பட்டது.கடலில் உள்ள பாறை திட்டுகள் அனைத்தும் வெளியே தெரிந்தன. இருப்பினும், கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் கடல் உள்பகுதிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். சிலர் உற்சாக மிகுதியில் பாறைகளில் நின்று செல்பி எடுத்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று சுமார் 50 அடி துாரத்துக்கு கடல் நீர் உள் வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தன.நேரம் செல்லச் செல்ல மதியம் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் எவ்வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அமாவாசை, பவுர்ணமி காலங்களில் இதுபோன்று கடல் உள்வாங்குவது இயல்பு என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025