உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்னா

கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்னா

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில், நகர சுமை ஏற்றி இறக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கம் உள்ளது. அப்பகுதியில் வரும் வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டள்ளனர். இந்நிலையில், மற்றொரு தரப்பினர் அவர்கள் பணிக்கு இடையூறு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.பணிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சுமை துாக்கும் தொழிலாளர்கள் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுமை துாக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திடீரென தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு நடத்தினர். இரு தரப்பையும் அழைத்து விரைவில் பேச்சு நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை