மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில், கடல் அருகே அமைந்திருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின் சுவாமி தரிசனம் செய்வர். கடந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ரமணா, குடும்பத்துடன் கடற்கரையில் மண் குளியல், சூரிய குளியல் போட்டார். அவர், உற்சாகமாக மண் குளியல் போடுவதை பக்தர்கள் வேடிக்கையுடன் பார்த்து ரசித்தனர்.இதுகுறித்து, ஆயுர்வேத டாக்டர் ரணமா கூறியதாவது:கடலில் குளிப்பதால் உடலில் நச்சுத்தன்மை நீங்கி பல்வேறு நோய்கள் குணமாகும். இதற்காக கோவா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து போன்ற பகுதிகளுக்கு சென்றால் அதிகம் செலவாகும். ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் திருச்செந்துாரில் சூரிய குளியல், மணல் குளியல் போடுவதால செலவும் குறைவு.அறிவியல் பூர்வமாகவும், மருத்துவப் பூர்வமாகவும் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அளிக்கும். உப்பு காரத்தன்மை உடைய கடலில் நீண்ட நேரம் குளிப்பதால் பல்வேறு தோல் நோய்கள் குணமாகும். மேலும், எலும்புகள் வலுப்பெற்று, உடல் சூடு, மன அழுத்தம் குறையும்.விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டிலிருந்து வீடியோ கேம், மொபைல் போனில் விளையாடுவதால் மனதளவில் பாதிக்கப்படுவர். அதைத் தவிர்த்து கடற்கரையில் மணல் குளியலிட்டு விளையாடி மகிழ்வதால், குழந்தைகள் மனதளவிலிலும் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025