உள்ளூர் செய்திகள்

பெண் போலீஸ் தற்கொலை

தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்பிக்நகரைச் சேர்ந்தவர் ஹரிப்பிரியா 28. ஆயுதப்படை போலீஸ். தூத்துக்குடி 3ம் மைல் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்தாண்டு வேம்பாரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அந்தோணி ஜெனிட்டை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் ஹரிப்பிரியாவுக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த நவநீதபிரியா என்ற பெண் போலீசுக்கும் பழக்கம் இருந்தது. நவநீதபிரியா சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர். அந்தோணியை திருமணம் செய்த பிறகும் ஹரிப்பிரியா புதுச்சேரியில் நவநீதபிரியாவுடன் தங்கியிருந்துள்ளார். இதற்கு கணவர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் கோவில்பட்டி செல்வதாக கூறி விட்டு புதுச்சேரி சென்ற ஹரிப்பிரியா திண்டிவனத்தில் நவநீதபிரியாவுடன் இருந்ததை கண்டுபிடித்து மார்ச் 22 ல் மீட்டு கணவர் குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.நேற்று ஆயுதப்படை குடியிருப்பு வீட்டில் அந்தோணி ஜெனிட் உள் அறையில் தூங்கிய போது மற்றொரு அறையில் ஹரிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை