மேலும் செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் ரீல்ஸ் எடுக்க தடை
20-Nov-2025
கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு
19-Nov-2025
டயோசீஸ் தேர்தல் மோதல் தி.மு.க., நிர்வாகி கைது
18-Nov-2025
அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி
17-Nov-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், உடன்குடி பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் பேசியதாவது:கருப்பட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தரமான கருப்பட்டி உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து, கருப்பட்டியில் காணப்படும் சுக்ரோஸ் அளவு குறைவாக உள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்கின்றனர்.இதுதொடர்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கையால் மக்கள் குழப்பமடைந்து கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு தரமான கருப்பட்டி உற்பத்தி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இயற்கையான முறையில் கிடைக்கும் கருப்பட்டியை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளதாக கூறிய கலெக்டர் இளம்பகவத், தானும் கருப்பட்டி காபி தான் குடித்து வருவதாக தெரிவித்தார். பின், இந்த விவகாரம் தொடர்பாக, டி.ஆர்.ஓ., விசாரணை நடத்துவார் என கலெக்டர் கூறினார்.
20-Nov-2025
19-Nov-2025
18-Nov-2025
17-Nov-2025