உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சவுடாம்பிகா அம்மன் கோவில் விழா: உடலில் கத்தி போட்டு நேர்த்திக் கடன்

சவுடாம்பிகா அம்மன் கோவில் விழா: உடலில் கத்தி போட்டு நேர்த்திக் கடன்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் ராமலிங்க சவுடாம்பிகா அம்மன் திருக்கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவில் பக்தர்கள் உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது.அசுரர்களை அழித்த சவுடாம்பிகை அம்மனை சாந்தப்படுத்துவதற்காகவும்,உலக மக்கள் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா மே 21 ல் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வானரமுட்டி கிராமத்தில் உள்ள குளக்கரையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனை சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்திற்கு முன்பாக ஆண்கள், சிறுவர்கள் தங்களது தலையில் எலுமிச்சம் பழத்தை கட்டியவாறு உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை