உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராமத்தில், அங்கன்வாடி மையம் கட்டும் பணி நடக்கிறது. ஊருக்கு வெளியே, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டால், குழந்தைகள் செல்வதற்கு சிரமம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மின்சார டிரான்ஸ்பார்மர், கிணறு உள்ள பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பது பாதுகாப்பாக இருக்காது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஊருக்குள் உள்ள இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், கோரிக்கைகள் அடங்கிய மனுவை யூனியன் அலுவலகத்தில் அவர்கள் வழங்கினர்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், அகில இந்திய பார்வார்டு பிளாக் வடக்கு மாவட்ட செயலர் அழகுபாண்டி, தமிழ்ப்பேரரசு கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயலர் வேல்முருகன், பசும்பொன் ரத்ததான கழக தலைவர் செண்பகராஜ். வீரவாஞ்சி நகர் பகுதி தலைவர் மாயக்கண்ணன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி