உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா

புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா

சாத்தான்குளம் : சாத்தான்குளம் பெண்கள் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா நடந்தது. சாத்தான்குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்எல்ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டடப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா நடந்தது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவசங்கரன் நாயர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆலிவர்சாம் வரவேற்றார். சாத்தான்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.,ராணி வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிந்து கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்தார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் முன்னாள் எம்எல்ஏ.,ராணி வெங்கடேசன் தேசிய கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் காங்.,வட்டாரத் தலைவர் சங்கர், இளைஞர் காங்.,செயலாளர் அலெக்ஸ், மனித உரிமை காங்.,வட்டாரத் தலைவர் போனிபாஸ், கல்லூரிக் கழகத் தலைவர் கவிஞர் சுப்ரமணியம், செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி