உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கழுகுமலையில் மணல் லாரி மோதி பள்ளி மாணவர் பலி

கழுகுமலையில் மணல் லாரி மோதி பள்ளி மாணவர் பலி

கழுகுமலை : கழுகுமலையில் மணல் லாரி மோதியதில் பள்ளி மாணவர் பலியானார். உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி பள்ளிமாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்தியதால் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: கழுகுமலை குமாரபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துமாடன்(12). இவர் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவந்தார். முத்துமாடனுக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில் முத்துமாடன் நேற்று மாலையில் வழக்கம்போல் பள்ளிமுடிந்து சைக்கிளில் ஊருக்கு திரும்பிகொண்டிருந்தார். பள்ளியில் இருந்து சில அடிதூரம் சென்றபோது கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் நோக்கிசென்ற மணல் லாரி முத்துமாடன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே முத்துமாடன் பலியானார். பள்ளிமுடிந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்ற ரோட்டில் நடந்த இந்த விபத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந் மாணவர்களும் பொதுமக்களும் லாரியை சிறைபிடித்து மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி சிலம்பரசன், கிழக்குபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் கயத்தாறு இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், கழுகுமலை சப்இன்ஸ்பெக்டர்கள் முத்து, கிருஷ்ணன், பாண்டித்துரை உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பலியான மாணவனின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் கழுகுமலை சங்கரன்கோவில் ரோட்டில் மணல் லாரிகளை வரவிடாமல் தடுக்கவும், பள்ளியில் கிழக்குபகுதியில் வேகத்தடை அமைக்கவும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியின் முன்பு போலீஸ் காவல் போட வலியுறுத்தி கழுகுமலை மேலக்கேட்டில் மாணவர்கள்,மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோவில்பட்டி தாசில்தார் காளிமுத்து மற்றும் போலீஸ் அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல்போராட்டம் கைவிடப்பட்டது. மறியல்போராட்டத்தினால் சங்கரன்கோவில் கோவில்பட்டியில் ரோட்டில் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்துபாதிக்கப்பட்டது.லாரி டிரைவர் தென்காசி அருகேயுள்ள சிங்கிலிபட்டியைச் சேர்ந்த கோட்டியப்பன்(35) சங்கரன்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தார். விபத்துகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை