மேலும் செய்திகள்
மாணவியிடம் சில்மிஷம் பாதிரியார் மீது போக்சோ
25-Nov-2025
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கவின். ஐ.டி., நிறுவன ஊழியர். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெண்ணின் சகோதரர் சுர்ஜித். இவர் திருநெல்வேலியில் கவினை கொலை செய்தார். அவர் போலீசில் சரணடைந்தார். சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். சரவணன்,'சம்பவத்தன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. கைதாகி 98 நாட்களுக்கு மேலாகிறது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். அரசு தரப்பு,'சம்பவத்தன்று மனுதாரர் விடுப்பில் இருந்தார். கவினின் உடலை மனுதாரர் பார்வையிட்டதற்கு ஆதாரம் உள்ளது. ஜாமின் வழங்கினால் விசாரணையை பாதிக்கும்,' என ஆட்சேபம் தெரிவித்தது. நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
25-Nov-2025