|  ADDED : மார் 20, 2024 12:07 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
துாத்துக்குடி:துாத்துக்குடி தென்பாக்கம் அந்தோணியார் சர்ச் அருகே கடந்த 9ம் தேதி, வேலுாரைச் சேர்ந்த பெண் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். அவருடன் படுத்திருந்த அவரது, 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது.எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.இதுதொடர்பாக, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அண்ணா நகரைச் சேர்ந்த கருப்பசாமி, 47, கரும்பனுாரைச் சேர்ந்த ராஜன், 53, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் படி, 2022 டிசம்பரில் திருச்செந்துாரில் இரண்டரை வயது குழந்தை; 2023 அக்டோபரில் குலசேகரப்பட்டினம் கோவிலில் கடத்திய 2 வயது குழந்தை, துாத்துக்குடியில் 4 மாத பெண் குழந்தை; மேலும் இன்னொரு குழந்தை ஆகிய நான்கு குழந்தைகளைமீட்டனர்.கைதான இருவரும், கோவில்களில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களின் குழந்தைகளை கடத்தி, ஆலங்குளம் பகுதியில்  குழந்தைகள் இல்லாத பெற்றோருக்கு விற்பனை செய்து வந்தனர்.மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நலக்குழு மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என போலீசார் கூறினர்.