உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சாத்தை.,யில் மா.கம்யூ.,தர்ணா

சாத்தை.,யில் மா.கம்யூ.,தர்ணா

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் மா.கம்யூ.,கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.மா.கம்யூ.,கட்சி சாத்தான்குளம் ஒன்றியக்குழு சார்பில் ஊழலுக்கு எதிரான தர்ணா போராட்டம் நடந்தது. சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு நடந்த போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்தி கம்யூ.,ஒன்றிய செயலாளர் அம்புரோஸ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். கிருஷ்ணன், சங்கரலிங்கம், சாமி, ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேர்மத்துரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை