உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டி, கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல்

கோவில்பட்டி, கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல்

கோவில்பட்டி : கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். உடலில் கட்சி கொடி வரைந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்து அசத்தினர். தமிழக உள்ளாட்சி தேர்தலுக்காக கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் (26ம் தேதி) முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியது. வேட்புமனு தாக்கல் செய்யும் கோவில்பட்டி யூனியன் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் கட்சியினர், வேட்பாளர்கள், ஆதரவாளர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் கோவில்பட்டி 272 மற்றும் கழுகுமலை 33 பேர் என மொத்தம் 305 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் கோவில்பட்டி யூனியனில் மாவட்ட கவுன்சிலருக்கு 4 பேரும், யூனியன் கவுன்சிலருக்கு 38, பஞ்.,தலைவருக்கு 39, பஞ்.,வார்டு உறுப்பினருக்கு 122பேர் என 203 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கோவில்பட்டி நகராட்சியில் சேர்மன் பதவிக்கு மாற்று வேட்பாளர் உட்பட திமுக.,2, அதிமுக.,1 என 3 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 66 பேர் என மொத்தம் 69 பேரும், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி சமக.,சார்பில் 34வது வார்டில் கவுன்சிலருக்கு போட்டியிட நகர தொண்டரணி செயலாளர் தனபாலன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

அப்போது அவருக்கு ஆதரவு தெரிவித்து தனபாலனின் உறவினரும், சமக.,வை சேர்ந்தவருமான கணேசமூர்த்தி என்பவர் உடலில் வண்ணங்கள் தீட்டிக் கொண்டு வித்தியாசமாக வந்திருந்தார். அவர் தனது தலையை மொட்டையடித்து. அதில் வாழ்க சரத்ஜி என்றும், முகத்திலும், மார்பு, கையிலும் சிவப்பு மஞ்சள் நட்சத்திரத்துடன் சமக.,கொடியை வரைந்திருந்தார். மேலும் அதில் வாழ்க சமத்துவம் புரட்சி திலகம் என்று எழுதியிருந்ததுடன் முதுகிலும் கொடியை வரைந்து 34வது வார்டு அஇசமக.,என குறிப்பிட்டிருந்தார். இதேபோல் கழுகுமலை டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு மன்மதராஜன் என்பவரும், கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் என மொத்தம் 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் நேற்று ஒரேநாளில் கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் 305 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை