உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டை குறுக்கே கடக்கும் பகுதிகளில் விபத்தை தவிர்க்க போலீஸ் ஆலோசனை

ரோட்டை குறுக்கே கடக்கும் பகுதிகளில் விபத்தை தவிர்க்க போலீஸ் ஆலோசனை

திருப்பூர் : திருப்பூரில் உள்ள பிரதான ரோடுகளில், ரோட்டை குறுக்கே கடக்கும் பகுதிகளில் அதிக நெரிசலும், விபத்துகளும் நடப்பதால், மாற்று நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசிக்கின்றனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பகுதி; மாநகராட்சி அலுவலகம் முன் சிக்னல் பகுதி; புஷ்பா தியேட்டர் ரவுண்டானா, காங்கயம் கிராஸ் ரோடு - தாராபுரம் ரோடு சந்திப்பு; எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னல் சந்திப்பு; அவிநாசி ரோட்டில் குமார் நகர் - சாமுண்டிபுரம் ரோடு சந்திப்பு; மங்கலம் ரோடு தாடிக்கடை முக்கு; வீரபாண்டி பிரிவு - குப்பாண்டம்பாளையம் ரோடு சந்திப்பு; பலவஞ்சிபாளையம் - தாராபுரம் ரோடு சந்திப்பு.அரசு மருத்துவமனை அருகில், செவந்தாம்பாளையம் பிரிவு - அம்மாபாளையம் - ராக்கியாபாளையம் பிரிவு சந்திப்பு; யூனியன் மில் ரோடு - ஊத்துக்குளி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில்,ரோட்டின் குறுக்கே வாகனங்கள் அதிகளவில் கடக்கின்றன; பிரதான ரோடுகளான இப்பகுதிகளில், வாகனங்களும், நடந்து செல்வோரும் ரோட்டை குறுக்கில் கடக்கும் நேரங்களில் அதிகளவில் விபத்துகளும், நெரிசலும் ஏற்படுகின்றன. சில பகுதிகளில் மட்டுமே போக்குவரத்து போலீசார், நெரிசல் மற்றும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்து கின்றனர்; மற்ற பகுதிகளில், போலீசார் நிறுத்தப்படுவது இல்லை என்பதால், வாகன போக்குவரத்து தாறுமாறாக உள்ளது.இத்தகைய சிக்கலான பகுதிகள் குறித்து போக்குவரத்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் சிலவற்றை ஒரு வழியாக்கவும், கனரக வாகனங்களை, சில நூறு மீட்டர்களுக்கு முன்னதாக வேறு வழிகளில் திருப்பி விடுவது குறித்தும் திட்டமிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ