உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொபைல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தம்

மொபைல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தம்

உடுமலை : உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொபைல்போன் இ-ரீசார்ஜ் விற்பனை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. உடுமலையில், நேற்றுமுன்தினம் மொபைல்போன் மற்றும் இ-ரீசார்ஜ் விற்பனையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 'வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் மதிப்பு கூட்டு சேவை என்ற பெயரில் பிடித்தம் செய்யக் கூடாது; மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் விற்பனையாளர்களுக்கு கமிஷன் அதிகம் தர வேண்டும்; ரீடைலர் கமிஷன் தொகை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக,' முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை