உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவ காப்பீடு திட்டம்; மாணவர்களுக்கு விளக்கம்

மருத்துவ காப்பீடு திட்டம்; மாணவர்களுக்கு விளக்கம்

அவிநாசி : மருத்துவ காப்பீடு திட்டங்கள், வங்கி நடைமுறை குறித்து கருவலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், காப்பீடு திட்டங்கள் மற்றும் வங்கி நடைமுறை குறித்து மாணவர்களுக்கு விளக்கும் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார்.சோமனூர் கிளை சிட்டி யூனியன் வங்கி மேலாளர் வைத்தியநாதன், வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கும் நடைமுறை, சேமிப்பின் அவசியம் குறித்தும், சூலூர் கிளை எல்.ஐ.சி., மேலாளர் அஜய்குமார், உதவி மேலாளர் மனோன்மணி ஆகியோர், மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமிநாதன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ