உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவாரூர் சிறுவர்கள் திருப்பூரில் மீட்பு

திருவாரூர் சிறுவர்கள் திருப்பூரில் மீட்பு

திருப்பூர் : திருவாரூர் மாவட்ட சிறுவர்கள் இருவரை, திருப்பூர் ரயில்வே போலீசார் பிடித்து, 'சேவ்' அமைப்பிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம், நீலமங்கலத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் - அமுதா; விவசாயி. இவர்களது மகன் கோகுலன் (15); அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி - சித்ரா மகன் ஜெகதீசன் (15) நண்பர்களான இவர்கள், அப்பகுதியில் உள்ள கிழாமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். வீட்டை விட்டு ஓடி வந்து, திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு, வேலை பார்க்க மறுத்த கோகுலனை பனியன் உரிமையாளர்கள் அடித்துள்ளனர். இதனால், மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்த அச்சிறுவர்கள், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை வந்துள்ளனர். அங்கு, தனியாக நின்று கொண்டிருந்த இருவரை ரயில்வே போலீசார் பிடித்து, 'சேவ்' அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை