உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

உடுமலை : உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் விருது பெற்றார். உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் ரவீந்திரன். இவர் 13 ஆண்டுகள் ஈரோடு அருள்நெறி திருப்பணி மன்றம் மேல்நிலைப் பள்ளியிலும், 6 ஆண்டுகள் ஈரோடு நசியனூர் பாரதி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளியிலும் உயிரியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார். 2005ம் ஆண்டிலிருந்து உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2010-11ம் கல்வியாண்டிற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினை தமிழக அரசு வழங்கியது. சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆசிரியர் தின விழாவில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சண்முகம் நல்லாசிரியர் விருதினை வழங்கினார். விருது பெற்ற தலைமையாசிரியர் ரவீந்திரனை பள்ளி கழக தலைவர் டாக்டர் மோகன்பிரசாத், நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ