உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிரே... உறவே! அன்பின் ஆரவாரம்

உயிரே... உறவே! அன்பின் ஆரவாரம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராம் நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன், 74; மனைவி சாந்தி, 61. பப்பு, பாப்பா, டிப்பனா என, வீட்டில், மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரிக்கிறார்.''நாய் என, சொல்வது எனக்கு பிடிக்காது. இவர்கள் என் குழந்தைகள். இயற்கை உபாதை வந்தாலும், புதியவர்கள் வீட்டுக்கு வந்தாலும், வெவ்வேறு சத்தம் எழுப்புவர். வெளியூருக்கு சென்றால் கூட, என் நினைவெல்லாம் இவர்களை சுற்றியே இருக்கும். ஒரு நாளும் குழந்தைகளை பட்டினி போட விடமாட்டேன். கடை வீதியில் திரிந்த ஒரு 'குழந்தை' (நாய்) மீது யாரோ காரை ஏற்றிவிட்டனர். கால் முறிந்து, ஆதரவின்றி அவதிப்பட்டது. சிகிச்சை அளித்து அதற்கு, 'பப்பு' என பெயரிட்டு பராமரிக்கிறேன். ஆதரவற்ற நாய்களை பராமரித்து வளர்த்தால், அவை நன்றி உள்ளவையாக இருக்கும்'' என்று உற்சாகம் பொங்க கூறுகிறார், சாந்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

senthil
ஏப் 27, 2024 02:43

மிகவும்நல்லஉள்ளம்கொண்ட இதுபோன்ற மனிதர்களால்தான் இந்தஉலகம் இன்னும் இயங்கிக்கொண்டுள்ளது


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை