உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் தொகுதியில் 13 பேர் போட்டி  ஒரு பேலட் யூனிட் மட்டும் போதுமே!

திருப்பூர் தொகுதியில் 13 பேர் போட்டி  ஒரு பேலட் யூனிட் மட்டும் போதுமே!

திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் உட்பட, 13 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.திருப்பூர் லோக்சபா தொகுதி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபி என, ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. தொகுதியில், ஏழு லட்சத்து, 81 ஆயிரத்து, 196 ஆண்கள்; எட்டு லட்சத்து, 2,810 பெண்கள், 237 திருநங்கைகள் என, 15 லட்சத்து, 84 ஆயிரத்து, 243 வாக்காளர் உள்ளனர்.திருப்பூர் வடக்கில், 379 ஓட்டுச்சாவடி, திருப்பூர் தெற்கு - 242, கோபி -296, பெருந்துறை -264, பவானி -289, அந்தியூர் -262 என, மொத்தம் 1,732 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஆறு சட்டசபை தொகுதி வாரியாக, 'விவி பேட்' உட்பட, 1,910 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன.தொகுதியில் போட்டியிடும், வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 13 வேட்பாளர் இத்தேர்தலில் போட்டிடுவது உறுதியாகியுள்ளது; இதன்மூலமாக, ஓட்டுச்சாவடிகளில், ஒரு 'பேலட் யூனிட்' மட்டும் பயன்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை