உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்களிடம் நகை பறிப்பு 2 பேர் கைது; 8.5 சவரன் மீட்பு

பெண்களிடம் நகை பறிப்பு 2 பேர் கைது; 8.5 சவரன் மீட்பு

திருப்பூர்:திருப்பூர் அருகேயுள்ள கணியாம்பூண்டியை சேர்ந்தவர் காஞ்சனா, 43. கடந்த, 3ம் தேதி மாலை அப்பகுதியில் டூவீலரில் சென்ற போது, பின் தொடர்ந்து வந்த, இருவர் திடீரென காஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த,7 சவரன் நகையை பறித்து சென்றனர். அதே நாளில், பெருமாநல்லுார் அருகே மூதாட்டி ஒருவரிடம், இதே நபர்கள், 1.5 சவரன் நகையை பறித்து சென்றது. இவ்விரு வழக்கு தொடர்பாக, திருமுருகன்பூண்டி, போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார், பெரம்பலுாரை சேர்ந்த வெங்கடேஷ், 24, பிரகாஷ், 24 என, இருவரை பிடித்தனர். இருவரும் தனியாக வரும் பெண்களை நோட்டமிட்டு, கைவரிசை காட்டியது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, 8.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இருவர் மீது, கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை