உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2 ரேஷன் கடைக்கு ஒரே ஊழியர்; கூட்டுறவு பணியாளர் வேதனை

2 ரேஷன் கடைக்கு ஒரே ஊழியர்; கூட்டுறவு பணியாளர் வேதனை

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (வளர்மதி) கிளை கூட்டம், கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். புதிய தலைவராக வேலுசாமி, துணை தலைவராக செல்வி, செயலாளராக பிரபாகரன், துணை செயலாளராக அண்ணாதுரை, பொருளாளராக யசோதா மற்றும் 11 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை (வளர்மதி) பண்டகசாலைக்கு முழு நேர துணை பதிவாளரை நியமிக்க வேண்டும். ஒரே பணியாளர், இரண்டு ரேஷன் கடைகளை நடத்த வேண்டியுள்ளது; காலியிடத்தை நிரப்ப வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை