உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்கேயத்தில் போலீசாரை தாக்கிய இலங்கை தமிழர்கள் 4பேர் கைது

காங்கேயத்தில் போலீசாரை தாக்கிய இலங்கை தமிழர்கள் 4பேர் கைது

காங்கேயம்: காங்கேயத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, போலீசாரை தாக்கிய, இலங்கை தமிழர்கள் நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பள்ளி மாணவிகளிடம் குறும்பு செய்த, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த வாலிபர் விஸ்வா என்பவரை, போலீஸ்காரர் மணிகண்டன் விசாரணைக்காக, காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை அழைத்து சென்றார். அப்போது ஸ்டேசனில் இரு போலீசார் மட்டுமே இருந்தனர். இதையறிந்த இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். போலீசாரை திடீரென தாக்கியுள்ளனர். இதில் இரண்டு போலீசார், ஒரு பெண் எஸ்.ஐ., காயமடைந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்தீபன், இலங்கை தமிழர்களான விஸ்வா, கோபிநாத், விவேக், விஜய் என நான்கு பேரை கைது செய்தார். உடுமலை கோர்ட்டில் நான்கு பேரையும் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை