உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சூறவாளி காற்றுக்கு 4 ஆயிரம் வாழை சேதம்

சூறவாளி காற்றுக்கு 4 ஆயிரம் வாழை சேதம்

அவிநாசி:அவிநாசி அடுத்த சேவூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சாரல் மழை பெய்தது. பின், சூறாவளிக்காற்று வீசியது.இதில் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. நேற்று வருவாய்த் துறையினர் சேதமான வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதில் பொன்னுச்சாமி, ராமமூர்த்தி மற்றும் கல்யாணி ஆகியோர் தோட்டத்தில் தலா ஆயிரம் வாழை மரங்களும் செல்வமணி, வெள்ளியங்கிரி, பழனிச்சாமி, ருக்மணி உள்ளிட்டோர் தோட்டங்களில் 300 முதல் 400 வாழை மரங்களும் சேதமாகியுள்ளன என தெரிவித்தனர்.சுமார் 4 ஆயிரம் வாழை மரங்கள் பலத்த சூறாவளி காற்றுக்கு முறிந்து சேதமடைந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'இன்னும் இரண்டொரு வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழை மரங்கள் சூறாவளிகாற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் முறிந்துள்ளது.இதனால் பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை