உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் தொழிலாளி கொலையில் 7 பேர் கைது

பனியன் தொழிலாளி கொலையில் 7 பேர் கைது

பல்லடம், : கரைப்புதுார் ஊராட்சி, அவரப்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் மகன் மோகன் குமார், 25; பனியன் நிறுவன தொழிலாளி.கடந்த, 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவர், ஏழு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். விசாரணை மேற்கொண்டு வந்த பல்லடம் போலீசார், கொலை தொடர்பாக, 7 பேரை கைது செய்தனர்.யுகேந்திர பிரசாத் 24, பிரதீப் 19, கணேஷ்குமார் 23, மனோஜ் 18, விஜய் 27, சஞ்சய்,18 உட்பட ஏழு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இதில், யுகேந்திர பிரசாத், விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது தவறி விழுந்ததில் இவரது கால் முறிந்து சிகிச்சையில் உள்ளார். வரவு செலவு பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை