உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டத்தில் 8.23 மி.மீ., மழை பொழிவு

திருப்பூர் மாவட்டத்தில் 8.23 மி.மீ., மழை பொழிவு

திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக, பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில், சராசரியாக 8.23 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அதிகபட்ச அளவாக, உடுமலை தாலுகா அலுவலக சுற்றுப்பகுதிகளில், 62 மி.மீ., - திருப்பூர் - அவிநாசி ரோடு, குமார் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலக பகுதிகளில் 29 மீ.மீ., மழை பதிவாகியுள்ளது. அவிநாசி தாலுகா அலுவலக பகுதியில் 18 மி.மீ., - திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் 17 மி.மீ., - மடத்துக்குளத்தில் 13 மி.மீ., மழை பெய்துள்ளது.திருமூர்த்தி அணைப்பகுதியில் 5; திருமூர்த்தி அணை (ஐ.பி.,) 5; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதி, ஊத்துக்குளி தாலுகா அலுவலக பகுதி மற்றும் அவிநாசி தாலுகா அலுவலக பகுதிகளில் தலா 4 மி.மீ., - காங்கயம் தாலுகா அலுவலக பகுதியில் 3; பல்லடத்தில் 2.50; உப்பாறு அணைப்பகுதியில் 2 மி.மீ., என, மாவட்டத்தில் மொத்தம் 164.50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.மழை தொடரும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை