உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில பேச்சுப்போட்டி 9 மாணவர்கள் தேர்வு

மாநில பேச்சுப்போட்டி 9 மாணவர்கள் தேர்வு

திருப்பூர்;நாடார் மகாஜன சங்கம் சார்பில், காமராஜர் பிறந்தநாள், கல்வித்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப்போட்டி, வரும் 15ம் தேதி விருதுநகரில் நடக்கிறது. இதையொட்டி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, திருப்பூரில், பி.என்., ரோட்டில் உள்ள முருகு மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. எஸ்.வி.என்., கல்லுாரி துணை தலைவரும் நாடார் மகாஜன சங்க பிரதிநிதியுமான பொன்னுசாமி தலைமைவகித்தார். மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட செயலாளர் இளங்கோ, முருகு மெட்ரிக் பள்ளி தாளாளர் பசுபதி, செயலாளர் சசிகலா முன்னிலை வகித்தனர். மேயர் தினேஷ்குமார், வாழ்த்தி பேசினார். அரசு, மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர், 205 பேர் போட்டியில் பங்கேற்றனர்.மாநில போட்டிக்கு தேர்வானோர்:ஆறு முதல் 8 ம் வகுப்பு பிரிவில், அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளி சால்வியா முதலிடம்; முருகு மெட்ரிக் பள்ளி தக் ஷனா இரண்டாமிடம்; பல்லடம் யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி சிவபார்வதி தாரணி மூன்றாமிடம். 9 - 10ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், முருகு மெட்ரிக் பள்ளி மாணவர் பிரதீஷ் முதலிடம்; அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவி லாவண்யா இரண்டாமிடம்; பூலுவப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் செண்பக பாண்டியன் மூன்றாமிடம்.பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டியில், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாசியா நோமின் முதலிடம்; காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி ஸ்ரீ சஷிகா இரண்டாமிடம்; முருகு மெட்ரிக் பள்ளி நிதர்ஷனா மூன்றாமிடம் பிடித்தனர்.மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஏழாயிரம் ரூபாய்; 2ம் இடத்துக்கு ஐந்தாயிரம்; மூன்றாமிடத்துக்கு மூவாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை