உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 97 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்

97 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்

திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் 97 பேருக்கு, ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் 97 பேருக்கு, மொத்தம் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டன.மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 2023 - 24 நிதியாண்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 92 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.88.33 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்கள்; முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வாகனம், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போன் என, 112 மாற்றுத்திறனாளிகளுக்கு, மொத்தம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,' என்றார்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.---இணைப்புச்சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருடன் பயனாளிகள்.

இலவச சர்வீஸ் கிடைக்குமா?

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாமில் தேர்வு செய்யப்பட பயனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள், பல மாதங்களுக்கு முன்னரே திருப்பூருக்கு வந்து சேர்ந்துவிட்டன. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதமே ஆர்.சி., புக், மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஸ்கூட்டர் வழங்கப்படாதநிலையிலேயே, சில மாற்றுத்திறனாளிகளுக்கு, ஷோரூமிலிருந்து இலவச சர்வீஸ்க்கான அழைப்பு வந்தது.வாங்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டநிலையில், தங்களுக்கு காலதாமதமாக வழங்கப்பட்டுள்ள ஸ்கூட்டர்களுக்கு, சர்வீஸ் ஸ்டேஷன்களில் முறையாக அனைத்து இலவச சர்வீஸ் வசதி கிடைக்கச் செய்யவேண்டும்.ஓட்டுனரின் பாதுகாப்புக்கு, வாகனங்களில் 'சைடு மிரர்' இருக்கவேண்டியது கட்டாயம். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய பெரும்பாலான வாகனங்களில், 'சைடு மிரர்' கூட பொருத்தப்படவில்லை. அனைத்து வாகனங்களிலும் பக்க கண்ணாடிகள் பொருத்தி தரவேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை.----ஸ்கூட்டர்கள் பலவற்றில் சைடு மிரர் பொருத்தப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்