உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிமென்ட் ஷீட் உடைந்து 3 வயது குழந்தை பலி

சிமென்ட் ஷீட் உடைந்து 3 வயது குழந்தை பலி

திருப்பூர்;திருப்பூரில், விளையாடி கொண்டிருந்த, மூன்று வயது குழந்தை மீது சிமென்ட் ஷீட் உடைந்து விழுந்து பரிதாபமாக இறந்தது.திருப்பூர், மங்கலம் - சாமளாபுரம், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன், 23. இவரது மனைவி நந்தினி, 22. தம்பதிக்கு, திவ்யஸ்ரீ, 3 என்ற மகள் இருந்தார்.நேற்று முன்தினம் வீட்டின் சிமென்ட் ஷீட்டிலான மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த 'சின்டெக்ஸ்' டேங்க் பாரம் தாங்காமல், சிமென்ட் ஷீட் உடைந்து, விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. குழந்தை தலையில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுதொடர்பாக, வீட்டின் உரிமையாளர் சுப்ரமணியம், 55 என்பவர் மீது மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி