உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முறைகேடாக மண் அள்ளிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

முறைகேடாக மண் அள்ளிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர் : தாராபுரம், குண்டடம், கத்தாங்கண்ணி, ருத்ராவதி, செங்காளிபாளையம், ஜோதியம்பட்டி ஆகிய கிராமங்களில் முறைகேடாக கிராவல் மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் தாராபுரம் வருவாய்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, கத்தாங்கண்ணி உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சாந்தாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில், கனிமவளத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல், 30 அடி ஆழத்துக்கு கிராவல் மண் வெட்டி எடுத்தது தெரிந்தது.இதுகுறித்து விசாரித்த போது, அங்கு லேசான வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து குண்டடம் போலீசார் சென்றனர். தாசில்தார் புகாரின் பேரில், ராஜூ, அருண்குமார், மோகன்குமார் உள்ளிட்ட, ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை