உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர்கல்வி வழிகாட்டியாக சிறப்பு குழு இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை

உயர்கல்வி வழிகாட்டியாக சிறப்பு குழு இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை

உடுமலை:மாணவர்களுக்கு கல்வி இடைநிற்றலை தடுக்கவும், உயர்கல்விக்கு வழிநடத்தவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் இடைநிற்றலை தடுப்பதற்கு பல்வேறு செயல்பாடுகள் நடக்கின்றன.மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், பிளஸ் 2 நிறைவு செய்யும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.இவ்வாறு பள்ளி படிப்பை நிறைவு செய்வதும், மாணவர்கள் உயர்கல்வி தேர்வு செய்யும் நேரத்தில் தடுமாறுவதும், விண்ணப்பிக்க முடியாமலும், தங்களுக்கான வாய்ப்புகளை இழக்கின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வாக, நடப்பாண்டில் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆர்வமுள்ள முன்னாள் மாணவர்கள், கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர், ஆசிரியர் பயிற்றுனர்கள் குழுவில் உள்ளனர்.தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு முகாமும் பள்ளிகளில் நடக்கிறது. இருப்பினும், கூடுதலாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவினருக்கு, மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த பள்ளி மாணவர்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் உயர்கல்விக்கு எந்த கல்லுாரிகளில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.மேலும், உயர்கல்வியில் சேர்வதற்கான சான்றிதழ்கள், விண்ணப்பிக்கும் முறை, பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல், அரசு கல்லுாரிகளில் சேர்வது குறித்து இக்குழுவினர் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 தேர்வு எழுதாமல் விடுப்பு எடுத்த மாணவர்களையும் நேரடியாக சந்தித்து அவர்களுக்கான வாய்ப்பை விளக்கி, மீண்டும் ஜூன் மாதம் நடக்கும் துணைத்தேர்வில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும் ஊக்கப்படுத்தி, தேர்வு எழுத அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து கருத்தாளர்கள் குழுவினருக்கு விளக்கமளித்துள்ளனர். வட்டார அளவிலான பயிற்சிகளையும் நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை