உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆஸி., சர்வதேச ஜவுளி கண்காட்சி திருப்பூர் ஏற்றுமதியாளர் ஆர்வம்

ஆஸி., சர்வதேச ஜவுளி கண்காட்சி திருப்பூர் ஏற்றுமதியாளர் ஆர்வம்

திருப்பூர்:ஆஸ்திரேலியாவின், மெல்பர்ன் நகர வர்த்தக மையத்தில், நவ., 19 முதல் 21ம் தேதி வரை, சர்வதேச ஜவுளி கண்காட்சி நடக்கிறது. மத்திய அரசின், மானிய உதவியுடன், இக்கண்காட்சியில் பங்கேற்று பயன்பெறுமாறு, ஏ.இ.பி.சி., எனப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.ஆஸி.,யில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடை தேவை அதிகரித்துள்ளது; இந்தாண்டு ஜவுளி இறக்குமதி 1.80 லட்சம் கோடி ரூபாயாக உயருமென, கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த இறக்குமதி பங்களிப்பில், சீனா - 59, வங்கதேசம் - 11, வியட்நாம் - 7 சதவீதமாக உள்ளது. இந்தியா, 4.60 சதவீத பங்களிப்புடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.'வங்கதேச உள்நாட்டு குழப்பம், சீனாவிடம் இருந்து விலக விரும்பும் நாடுகள், இந்தியா - ஆஸி., இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றால், கண்காட்சி வாயிலாக, இந்தியாவுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்' என்கின்றனர், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், '2023ல் ஆஸ்திரேலியாவுக்கு, 63,320 கோடி ரூபாய் மதிப்பிலும், 2022ல், 69,363 கோடி ரூபாய் மதிப்பிலும் ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.'ஆஸ்திரேலியாவுக்கான, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2022ல், 2,843 கோடி ரூபாயாகவும்; 2023ல், 2,912 கோடியாகவும் இருந்தது. இந்திய ஏற்றுமதி பங்களிப்பு, 4.10 சதவீதமாக இருந்தது, 4.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.'ஆஸ்திரேலிய கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை கூடுதலாக ஈர்க்க வாய்ப்புள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி