உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆட்டோவுக்கு தீவைப்பு

ஆட்டோவுக்கு தீவைப்பு

திருப்பூர்;காங்கயம், திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 57; பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார். இரவு வழக்கம் போல் வேலை முடித்து விட்டு, ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு துாங்க சென்றார். நள்ளிரவு, 12:30 மணியளவில் வெடிக்கும் சத்தம் கேட்டது.வீட்டின் கதவை திறந்த போது, ஆட்டோ தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியோடு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். 'சிசிடிவி' காட்சியில், நள்ளிரவு நேரத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் என, இருவர் டூவீலரில் பாத்திரம் ஒன்றை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை