உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேச கோவில் மீது தாக்குதலுக்கு கண்டனம்

வங்கதேச கோவில் மீது தாக்குதலுக்கு கண்டனம்

திருப்பூர்:வங்கதேசத்தில் ஹிந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதலுக்கு திருகோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் அமைப்பாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை:வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை சமுதாயமாகவுள்ள ஹிந்துக்கள், ஒவ்வொரு நாளும் மிகுந்த அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றனர். 'இஸ்கான்' அமைப்புக்கு சொந்தமான வழிபாட்டு இடம் சூரையாட்டப்பட்டதுடன், முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டது. இது கண்டனத்துக்குரியது.மக்களை பாதுகாப்பது அரசின் கடமை. அங்குள்ள சிறுபான்மை சமுதாய ஹிந்துக்கள் பாதிக்கப்படும் போது, நம் நாட்டு மத்திய அரசு, உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை