உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளேக் மாரியம்மன் திருவிழா துவக்கம்

பிளேக் மாரியம்மன் திருவிழா துவக்கம்

உடுமலை உடுமலை டி.வி., பட்டணம் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கோவிலில், திருக்கம்பம் போடப்பட்டது.இக்கோவில் திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சக்திமதகு தீர்த்தம் எடுத்து வந்து, கோவிலில், திருக்கம்பம் நடப்பட்டது. திருக்கம்பத்தை திரளான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.நாளை, (10ம் தேதி) திருமூர்த்திமலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். வரும் 13ம் தேதி பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கிறது. வரும் 14ல், அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.வரும், 15ல், பொங்கல், மாவிளக்கு எடுத்து வருதல், பூவோடு எடுத்தலும், 16ம் தேதி அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராடுதல், அபிேஷக பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி