உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பத்திர விவகாரம்; மக்கள் முற்றுகை

பத்திர விவகாரம்; மக்கள் முற்றுகை

பல்லடம் : பல்லடம் அடுத்த, கே.அய்யம்பாளையம் ஊராட்சியில், கடந்த, 1989ம் ஆண்டு துணைத் தலைவராக இருந்தவர் வேலுசாமி. இவரது காலகட்டத்தில் வழங்கப்பட்ட நிலத்துக்கு, கடந்த, 30 ஆண்டுகளாக அசல் பத்திரம் தரவில்லை என்று கூறி, இப்பகுதி பொதுமக்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஒரு ஏக்கர் எங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் அசல் பத்திரத்தை வங்கியில் இருந்து வாங்கி தரவில்லை. வழித்தடமாக பயன்படுத்தி வந்த இடத்தை திடீரென கம்பி வேலி அமைத்து மூடியுள்ளனர்'' என்றனர்.வேலுசாமி கூறுகையில், 'அசல் பத்திரத்தை வாங்கிக் கொள்ள வேண்டியது இவர்கள் பொறுப்பு. இப்போது என்னிடம் வந்து கேட்டால் என்ன செய்வது?' என்றார்.தாசில்தார் ஜீவா, ''தாட்கோ வங்கியில் என்.ஓ.சி., பெற்று பத்திரம் வாங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ராஜீவ் நகரை நேரில் வந்து ஆய்வு செய்த பின் வழித்தடம் குறித்து ஆலோசிக்கலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை