உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முக்கோணத்தில் ரவுண்டானா அமையுமா? கிடப்பில் நீண்ட கால கோரிக்கை

முக்கோணத்தில் ரவுண்டானா அமையுமா? கிடப்பில் நீண்ட கால கோரிக்கை

உடுமலை, : முக்கோணத்தில், மூன்று ரோடு சந்திப்பு மேம்பாட்டு திட்டம், ரவுண்டானா அமைத்தல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதியில், நெரிசல் நிரந்தரமாக உள்ளது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஆனைமலை ரோடு பிரியும் மூன்று ரோடு சந்திப்பு முக்கோணம் பகுதியில் அமைந்துள்ளது.மாவட்ட முக்கிய ரோட்டில், வாளவாடி, தேவனுார்புதுார், ஆனைமலை உட்பட பகுதிகளிலிருந்தும், 20க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைந்து, பொள்ளாச்சி மற்றும் உடுமலை நோக்கிச்செல்கின்றன.இந்த சந்திப்பில், டிவைடர், வேகத்தடை உட்பட எவ்வித வசதிகளும் இல்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் அதிவேகமாக வரும் போது, ஆனைமலை ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன.சந்திப்பு அருகே, தேசிய நெடுஞ்சாலையில், பாலம் மற்றும் பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு பஸ்கள் நிறுத்தும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை. அப்போது, ஏற்படும் குழப்பத்தில், விபத்துகள் ஏற்படுகின்றன.இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ஆனைமலை ரோட்டிலிருந்து திரும்பி உடுமலை நோக்கி செல்லும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, முக்கோணத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கடந்தாண்டு, அங்குள்ள பாலம் விரிவாக்க பணிகள் நடைபெற்றபோதும், இக்கோரிக்கை குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி