உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புற்றுநோய் சிகிச்சை மையம் அகில் அப்பேரல்ஸ் நிதி வழங்கல்

புற்றுநோய் சிகிச்சை மையம் அகில் அப்பேரல்ஸ் நிதி வழங்கல்

திருப்பூர்;திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், அமைக்கப்படும் புற்றுநோய் நவீன சிகிச்சை மையத்துக்கு அகில் அப்பேரல்ஸ் நிறுவனம், 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளது.திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புற்று நோய் சிகிச்சைக்கான நவீன கருவிகள் கொண்ட மையம் கட்டப்படுகிறது. 'நமக்கு நாமே' திட்டத்தில், திருப்பூர் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை சார்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் அகில் அப்பேரல்ஸ் சார்பில், அதன் நிர்வாக இயக்குனர் இளங்கோ, 10 லட்சம் ரூபாய் இரண்டாவது தவணையாக நிதி வழங்கினார்.அறக்கட்டளை பொருளாளர் அருள்செல்வன் மற்றும் நிர்வாகிகள் இதைப் பெற்றுக் கொண்டனர். திருப்பூர் கிளை, சி.ஐ.ஐ.,யின் தலைவராக உள்ள இளங்கோ 10 லட்சம் ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி