உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரி கிரிக்கெட் போட்டி சிக்கண்ணா அணி வெற்றி 

கல்லுாரி கிரிக்கெட் போட்டி சிக்கண்ணா அணி வெற்றி 

திருப்பூர்;சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி சார்பில், கல்லுாரி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. ஆறு அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் நேற்று, அவிநாசி அரசு கலைக்கல்லுாரி அணியும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி அணியும் மோதின.முதலில் பேட் செய்த அவிநாசி அணி, 16.5 ஓவரில், 71 ரன் எடுத்து, 'ஆல் அவுட்'டானது. தொடர்ந்து, பேட்டிங் செய்த சிக்கண்ணா கல்லுாரி அணி, 7.1 ஓவரில், 74 ரன் எடுத்து வெற்றி பெற்றது.முன்னதாக, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், பொருளியல் துறை தலைவர் விநாயகமூர்த்தி போட்டிகளை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து, 22ம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ