திருப்பூர் : திருப்பூரில் கோலாகலமாக நடந்து வந்த வைகாசி விசாக தேர்த்திருவிழா, விடையாற்றி உற்சவத்துடன் நேற்று நிறைவு பெற்றது.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 23, 24 ம் தேதிகளில், தேரோட்டம், பரிவேட்டை, தெப்ப உற்சவம், மகா தரிசனம், மஞ்சள் நீர் உற்சவம் நடந்துள்ளது.விழாவின், 13ம் நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. மாலையில், கோவில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் சார்பில், விடையாற்றி உற்சவம் நடந்தது.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. திருவிழா நிறைவடைந்ததால், இதுவரை கொலு மண்டபத்தில் வீற்றிருந்த உற்சவமூர்த்திகளின் திருமேனிகள், தனி காப்பறைக்கு மாற்றப்படும் என, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.தேர்த்திருவிழாவில் நேற்று, ஸ்ரீசண்முகாலயா இசை நாட்டிய பள்ளியின், பக்தி பண்ணிசை மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இன்று, ஸ்ரீஅன்பு நாட்டிய கலா ேஷத்திரா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்க உள்ளது.தேர்த்திருவிழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சரவணபவன், அறங்காவலர் குழு தலைவர் சுப்ரமணியம், அறங்காவலர்கள், ஆதீஸ்வர் டிரஸ்ட், சேக்கிழார் புனிதர் பேரவை, ஸ்ரீவாரி டிரஸ்ட், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை, திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் உள்ளிட்ட ஆன்மிக அமைப்பினர் செய்திருந்தனர்.